அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இப்படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டைட்டிலை அதன் தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். ‘போர் தொழில்’ எனும் தலைப்பு, ‘ஆர்ட் ஆஃப் வார்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.