கமலுடன் ஜோடி சேரும் நயன்தாரா?

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தென்னாப்பிரிக்காவில் நடந்து வந்த நிலையில்,அங்கு பிரமாண்ட  ரயில் சண்டை காட்சியும் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க படப்பிடிப்பில் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அவருக்கு தனது நன்றியை தெரிவித்ததோடு, மீண்டும் மே மாதம் அடுத்த கட்ட படப்பிடிப்பில் சந்திக்கலாம் என்றும்,இந்தியன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கிளைமாக்ஸ் தான் என்றும் பதிவிட்டுள்ளார். எனவே வரும் மே மாதத்துடன் இப்படத்தின் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கமல்ஹாசனின் 234 வது திரைப்படத்தை மணிரத்னம் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.நடிகை நயன்தாரா தற்போது ’ஜவான்’ ’இறைவன்’ ‘தி டெஸ்ட்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்ட நயன்தாரா, கமல்ஹாசனின் 234 வது படத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்