கேலக்சி பிக்சர்ஸ் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில், எம் ஆர் மாதவன் இயக்கத்தில், உதய் கார்த்திக், ‘அட்டு’ ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, டி.மானேக்க்ஷா கவின் ஜெய்பாபு, TN அருண்பாலாஜி, முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள கமர்ஷியல் திரைப்படம் டைனோசர்ஸ். விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இந்நிகழ்வில் இயக்குநர் M R மாதவன் பேசியதாவது…
“சினிமா கண்டிப்பாக அனைவரையும் எட்டி உதைக்கும் நாம் தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும், படம் வெற்றி பெறுவது எனக்கு முக்கியம் என்பதை விடப் படத்தில் பணி புரிந்துள்ள 100 பேருக்குத் தான் முக்கியம், இந்தப்படம் பல கதாநாயகர்களிடம் சென்றது ஆனால் கார்த்திக் இப்படத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் , பல நண்பர்களின் முயற்சியால் தான் நான் இங்கு வந்தேன்,
தயாரிப்பார் ஸ்ரீனி சார் எனத் தந்தை போன்றவர், நான் கேட்ட அனைத்தும் செய்து கொடுத்தார், நான் வாழ் நாள் வரை அவரை மறக்க மாட்டேன், 143 தயாரிப்பாளரை நான் அணுகியுள்ளேன் , ஆனால் இவர் தான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார், என்னை இந்த தயாரிப்பாரிடம் அழைத்துச் சென்றது இயக்குநர் H வினோத் தான் அவருக்கு மிகவும் நன்றி. கதாநாயகன் உதய் கார்த்திக்பெரிய நடிகர்களான அஜித், விஜய் போன்று நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரவு பகல் பாராமல் பணி செய்துள்ளார், ரமணா சார் மிகவும் எளிமையானவர் அவரது எளிமை மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
கதாநாயகி தமிழ் பேசும் நடிகையாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தேன் அது போல அவர் அழகாக நடித்துள்ளார், ஸ்ரீனி நடிப்பு இந்த படத்தில் சிறப்பாகப் பேசப்படும், ஒளிப்பதிவாளர் என்னுடைய பாதி வேலையை அவரே செய்தார், இந்தப் படத்திற்கு இசையமைத்த போபோ சசி அதிக மெனக்கெடலுடன் உழைத்துள்ளார். இசை அருமையாக வந்துள்ளது. இயக்குநர் மிஷ்கின் சாருடன் இணைந்து பணி செய்ய நீண்ட நாட்களாக முயற்சி செய்தேன் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை, எனினும் இங்கு அவர் வந்ததற்கு நன்றி. நடிகர் அருண் விஜய் சார் மற்றும் விஜய் குமார் சாருக்கு நன்றி, இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குச் சிறந்த பொழுது போக்காக இருக்கும் நான் கலைப் படம் பண்ணவில்லை காலாய் படம் பண்ணியுள்ளேன். என் வளர்ச்சிக்கு முழுமுதல் காரணமாக இருக்கும் என் அம்மாவிற்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும்,இவ்வாறு அவர் பேசினார்