இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்பட பலர் நடித்துள்ளனர்
ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார் இந்த படத்தில் இடம்பெறும் பாடலொன்றை ராப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதி, பாடியிருக்கிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்
இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து,தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.