இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இதன் வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு இன்று மாலை புதிய டீஸருடன் அறிவித்துள்ளது.
அதன்படி இப்படம் சுதந்திர தின விடுமுறையையொட்டி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனிடையே சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வரும் இப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.
இப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மாவீரன் படத்துக்கு ஒரு நாள் முன்னதாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை மாதத்திற்கு மாற்றப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
#Jailer is all set to hunt from August 10th💥 @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @StunShiva8 #JailerFromAug10 pic.twitter.com/Wb7L0akJ4k
— Sun Pictures (@sunpictures) May 4, 2023