இதில், அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் முன்னணி பாத்திரங்களில் நடிக்க,இவர்களுடன், இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநர் பிரசாத் முருகேசன் கூறுகையில்.”மத்தகம் என்பது யானையின் முன் நெற்றியை குறிக்கும் சொல் ஆகும். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும்.
30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை சுவாரஸ்யமாகச் சொல்லும் வெப் தொடர் தான் “மத்தகம்”. ஒரு இரவில் நாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தை படம்பிடித்தது சவாலானதாக இருந்தது. இந்த சீரிஸ் ரசிகர்களுக்குக் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்கிறார்.
இத்தொடருக்கு எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்துள்ளார்,