இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். செப்சிஸ் நோயால் அவதிப்பட்டு வந்த
அவருக்கு அங்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்ததார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் சரத்பாபு மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.அவருக்கு என் அஞ்சலி” இவ்வாறு அவர் கூறியுள்ளார்