கமலின் நடிப்பு திறமையை பாராட்டி 19 பிலிம்பேர் விருதுகள்,10 தமிழக அரசு விருது, தேசிய விருது, மத்திய அரசின் உயரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது பத்மபூஷண் விருது, நந்தி விருது என பல்வேறு விருதுகளை கமல்ஹாசன் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற மே 27ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கமல் இவ்விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய சினிமாவில் சிறப்பாக பங்காற்றியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. இந்த செய்தி சோஷியல் மீடியாவில் வைரலானதை அடுத்து ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், என பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்து மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.