நடிப்பு, அரசியல், படத்தயாரிப்பு என பிசியாக வலம்வரும் உலகநாயகன் கமல்ஹாசன் கதர் ஆடைகளை விற்பனை செய்யும், ‘ஹவுஸ் ஆப் கதர்’ என்ற ஆன்லைன் வர்த்தக விற்பனை நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்
இதற்கான லோகோவை ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதி நாளில் அவர் வெளியிட்து இருந்தார்.
இந்நிலையில் இந்த பிசினஸில் டிசைனர் அமிர்தா ராம் கமலுடன் கைகோர்த்துள்ளார் .
கதர் ஆடைகளை இன்றைய இளம் தலைமுறையினரும் அணிய வேண்டும் என்ற நோக்கில் கமல் இம்முயற்சியை கையில் எடுத்துள்ளார்
.இந்நிலையில் ஹவுஸ் ஆப் கதர் பிராண்டிற்காக ஏற்கனவே கமல் போட்டோஷூட் நடத்தி iஅப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில்,
தற்போது புதிய போட்டோஷூட்டை கமல் ஹாசன் நடத்தியிருக்கிறார்.
மிகவும் ஸ்டைலீசாக உறசாகமிக்க இளைஞனாக தோன்றும் உலகநாயகனின் கலர்புல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது.