இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் வம்சி கிருஷ்ணா இயக்குகிறார்.இப்படத்தில், டைனமிக் ஹீரோ நிகில் சித்தார்த்தா மற்றும் மூத்த நடிகர் அனுபம் கெர் ஆகியோர் நடிக்கின்றனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு,இப்படத்தின் அறிவிப்பு, சமூக ஊடக கணக்குகள் வழியாக வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது.
லண்டனில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டீசர் படத்தின் களத்தை சொல்வதாக அமைந்துள்ளது.
தி இந்தியா ஹவுஸைச் சுற்றி அரசியல் கொந்தளிப்பு நிலவும் சூழலில், ஒரு காதல் கதையை இப்படம் சொல்கிறது. எரியும் இந்தியா ஹவுஸின் பிரமாண்ட காட்சியுடன் இந்த டீசர் முடிவடைகிறது.