செம்மரக் கடத்தலை பின்னணியாக கொண்ட இப் படத்தை சுகுமார் இயக்கி இருந்தார்
இப்படம் வெளியான போதே, இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்,தற்போது இப் படத்தின் படப்பிடிப்பு தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா பகுதிகளில் மும்முரமாக நடந்து வருகிறது
சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஒரு சிலரைத்தவிர அதே கூட்டணி, இரண்டாம் பாகத்திலும் பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு புஷ்பா 2 படக்குழுவினர் ஒரு பேருந்தில் திரும்பி கொண்டிருந்த போது நர்கெட்பல்லே என்ற கிராமம் அருகே எதிரே வந்த பேருந்தும், படக்குழுவினர் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் நல்லவேளையாக யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.