விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2 ம் பாகத்தை இயக்குவார் என்றும், இலையில்லை சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்தே ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிரடி ட்விஸ்ட்டாக ரஜினியின் 171 வது படத்துக்காக ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் இணைவார். அதை முடித்துவிட்டு கைதி 2வை தொடங்குவார் என்ற தகவல் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில், போலி என்கவுன்ட்டர்களை மையமாக வைத்து படம் உருவாக உள்ளதாக கூறப்படும் இப்படத்தில் நிஜத்தில் நடந்த போலி என்கவுன்ட்டர் சம்பவங்களை வைத்து லோகேஷ் கனகராஜ் கதையை தயார் செய்கிறார் என்கிறார்கள்.
இப்படத்துக்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்த்,ஜெய் பீம் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் புதிய படத்தில், ரஜினிகாந்த் நடிக்கஉள்ளார் , இது நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் ரஜினிகாந்துக்கு .இஸ்லாமிய காவல் துறை அதிகாரி கதாபாத்திரம் தான் என்றும்,.ரஜினியின் 170 வது படமாக உருவாகும் இப்படம் தான் அவரது கடைசி படமாக இருக்கும் என பேசப்பட்டு வந்த நிலையில்,தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக (‘தலைவர் 171’) வெளியாகி வரும் செய்திகள் அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
‘தலைவர் 171’ படத்திற்கு பிறகே ரஜினி நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை தயாரிக்க இரண்டு பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் தனது வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த ஏவிஎம் நிறுவனத்துக்கு தயாரிக்கும் உரிமையை வழங்க உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
இந்நிலையில் ரஜினியின் 172 வது படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினி – ஷங்கர் கூட்டணியில் ஏற்கனவே சிவாஜி, எந்திரன், 2.O ஆகிய படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,ரஜினியை வைத்து எந்திரன் 3.0 படத்தை இயக்க உள்ளதாகவும் ரஜினியே தனது கடைசி படத்தை ஷங்கரே இயக்கட்டும் என விரும்புகிறார் என்கிறார்கள்.
ஷங்கர். இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்ததும் சூர்யாவுடன் இணைந்து வேள்பாரி படத்தை ஷங்கர் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,வேள்பாரி தள்ளிப்போகும் எனவும் கூறப்படுகிறது. மேலும், 3.O படத்தை லைகா அல்லது சன் பிக்சர்ஸ் தயாரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைவர் 171 படப்பிடிப்பு தொடங்கிய பின்னர் தான் தலைவர் 172 பற்றிய அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
சரி, ரஜினிக்கு இது தான் கடைசி படமா அமையுமா? என்றால், “கண்ணா, வாழ்க்கையை அது போக்குல ஓடவிடு. ஓடிக்கிட்டே இருக்கும் . கடைசி படம் எது என்பதை அதுவே தீர்மானிக்கட்டும் என்கிறாராம் ரஜினி சிரித்து கொண்டே….