இந்த வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக தாங்கள் இணைந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை குரு பூர்ணிமாவை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கையும் புதிய அனுபவத்தையும் தருவதை படக்குழு உறுதியளிக்கிறது. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் கதை சொல்லும் திறமை இந்தக் கூட்டணியில் உருவாகும் ஒவ்வொரு படத்தையும் மறக்க முடியாததாக ஆக்கியுள்ளது. ‘ரவீந்திர நாராயண்’, ‘விராஜ் ஆனந்த்’ மற்றும் ‘பாண்டு’ போன்ற பாத்திரங்களில் நடிகர் அல்லு அர்ஜூன் வாழ்ந்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு பாத்திரமும் நடிப்பும் உலகெங்கிலும் உள்ள சினிமா ஆர்வலர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளன.
மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான கீதா ஆர்ட்ஸ் பேனர், ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் உடன் தயாரிப்பில் இணைகிறது. இதற்கு முன்பு இவர்கள் ‘அலா வைகுந்தபுரமுலு’ படத்திலும் இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளது.