தமிழ்த்திரையுலகில் நடிகர் விஜய். முன்னணி நடிகராக மாறத் தொடங்கிய நேரத்தில் அவருக்கான ரசிகர் மன்றங்கள் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டன. அதன்பிறகு, சினிமாவைப் போலவே, அரசியலிலும் வெற்றிகொடி நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து விஜய் மக்கள் இயக்கமாக்கினார் அவரது தந்தையம் நடிகரும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.
அதன் தொடர்ச்சியாக, விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பல ஆண்டுகளாகவே பேச்சு அடிப்பட்டு வருகிறது. அவரது மக்கள் இயக்கத்தின் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், முன்னாள் புதுச்சேரி எம் எல் ஏ, புஸ்ஸி ஆனந்த் விஜய்மக்கள் இயக்க பொதுச்செயலாளராய் களமிறங்கிய நிலையில், அவற்றின் செயல்பாடுகள் தற்போது வெளிப்படையாகவே நடந்து வருகிறது.
இதன் காரணமாக அவரது ரசிகர்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவார் என்கிற வாதங்களை சமூக வலைதளங்களில் முன்வைக்கத் தொடங்கி இருக்கின்றனர்.அரசியலில் காலூன்றும் விதமாக, கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சுயேச்சையாக களமிறக்கினார்.
தேர்தலில் போட்டியிட்ட 129 பேர் வெற்றியும் பெற்றனர்.அண்மையில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழா, தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா, பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர். மேலும் கடந்த மாதம் 29ஆம் தேதி 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம் அளிக்கப்பட்டது.
சமீபத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பரிசுகல் வழங்கி பாராட்டியது அவரது அரசியல் பிரவேசம் குறித்த யூகங்களுக்கு இன்னும் வலுசேர்த்துள்ளது. இதற்கு ஏற்றார் போல், விஜய் தனது 68 வது படத்துடன் சினிமா வாழ்க்கையை முடித்துக்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ள இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கம் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில்,இப்படத்தை வரும் 2024 மே மாதத்திற்குள் முடித்து விட்டு,நடிப்புக்கு சில காலம் ஒய்வு கொடுத்து விட்டு நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 2026 ல் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும்,ஆனால் அதற்கு முன்னதாக வரும் 2025-ல் இருந்து,ஒரு அரசியல் கட்சிக்குள்ள வலுவான அனைத்து கட்டமைப்புகளையும் கொண்டுள்ள தனது மக்கள் இயக்க பணிகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளதாகவும் ,வரும் 2026-ல் தனது மக்கள் இயக்க பிரமாண்ட மாநாட்டை நடத்தி அம்மாநாட்டில் தனது அரசியல் அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும், அதற்கு முன்பாக விரைவில் தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்திலும் புதுவையிலும் விஜய்யின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்கிறது அவரது நெருங்கிய வட்டம்