ஸ்ரீரங்க நாச்சியார் மூவிஸ் பட நிறுவனம் எஸ். தோதாத்ரி சந்தானம் தயாரிப்பில் ,கவுசிக் யாதவி, நாஞ்சில் விஜயன், சோபியா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் பஜனை ஆரம்பம்.
இப்படத்தை பல்வேறு இயக்குநர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி எழுதி இயக்குகிறார். பி. இளங்கோவன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பிரபு இசையமைக்கிறார், வசனத்தை எம்.ஹரிஹரன்.எழுதியுள்ளார்.’
சென்னை, மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்னையில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஆனந்த் தட்சிணாமூர்த்தி பேசும் போது,”பஜனை என்பது மக்களிடம் பரவலாக அறியப்பட்ட சொல் தான். ஒவ்வொரு கோயிலிலும் இன்று ஆறு முப்பது மணிக்கு பஜனை ஆரம்பம் என்று பார்த்திருக்கிறோம் .சாதாரணமாக அதைக் கடந்து போய் இருப்போம்.
அந்த வகையில் தான் படத்தின் தலைப்பை வைத்திருக்கிறோம்.ஒரு ஈர்ப்புக்காகவும் பரபரப்புக்காகவும் கவனம் பெற வேண்டும் என்றும் தான் இந்தப் பெயரை வைத்துள்ளோம் .இந்தப் பட போஸ்டரில் 10 பெண்களுக்கு ஒருவர் தாலி கட்டுவது போல் ஒரு தோற்றம் உள்ளது. ஜப்பானில் அப்படி ஒருவர் ஒரே ஆண்டில் 10 பேரை திருமணம் செய்து கொண்டு அவர்களைத் தாயாக்கி இருக்கிறார்.இது ஒரு திருமண சாதனையாக பேசப்படுகிறது.
பத்திரிகையில் வந்துள்ள இந்தச் செய்தியை படத்தில் வரும் காமெடியன் படிக்கிறார். அப்போது அதைக் கேட்கிற கதாநாயகன் நாம் அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறார். அப்படி நமது கதாநாயகன் கற்பனை செய்து கனவு காண்பதாக வரும் காட்சியில் தான் இப்படி வருகிறது.
இங்கே நாயகன் பல பெண்களுக்குத் தாலி கட்டிப் பைத்தியம் ஆகி தற்கொலை செய்து கொள்வது போல் தான் காட்சி வரும். மற்றபடி படத்தில் பெண்களை எந்த வகையிலும் தவறாக நான் காட்டவில்லை.படம் மெடிக்கல் மாஃபியா பற்றித்தான் முழுமையாகப் பேசுகிறது.
இது ஆபாச படம் அல்ல. பெண்களை தவறாக சித்தரிக்கும் படமும் அல்ல. முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் படத்தில் இருக்காது.இன்று நாட்டில் நடக்கும் பிரச்சனை பற்றி சொல்கிற படம் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும்:இவ்வாறு அவர் பேசினார்.