இந்நிலையில் இக்கூட்டணி தற்போது நான்காவது முறையாக இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.
தனது முந்தைய படங்களான ‘கிராக்’ மற்றும் ‘வீர சிம்ஹா ரெட்டி’யைப் போலவே, உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனித்துவமான கதையை இப்படத்திற்காக உருவாக்கியுள்ளார்
இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைக்கிறார்.இதுவரை தோன்றாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ரவி தேஜாவுக்கு இப்படம் அவரது திரை வாழ்வின் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாக இருக்கும்.இப் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது..