இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டாலும், இன்னும் 10 நாட்கள் சில பேட்ச் வொர்க் படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளதாகவும், இது குறித்து ஷங்கர் தயாரிப்பு தரப்பிடம் கூறியும், தயாரிப்பு தரப்போ மூணு படத்துக்கு ஆகும் செலவு இந்த ஒருபடத்துக்கு செய்யப்பட்டுள்ளது. இனிமே கம்பெனி தாங்காது. .சட்டு புட்டுன்னு படத்தை முடிச்சு ரிலீஸ் பன்ற வேலையை பாருங்க என கறாராக கூறி விட்டது என்கிறார்கள்.
மேலும் இப்படத்தின் பைனல் அவுட் புட் கிட்டத்தட்ட 6 மணி நேரம் வந்துள்ளதால், இந்தியன் 3 ம் பாகம் வெளியிடலாம் என்கிற ஷங்கரின் கோரிக்கை குறித்தும் தயாரிப்பு தரப்பு இது வரை உறுதியான பதில் ஏதும் தெரிவிக்க வில்லை என்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தில் அதி நவீன புதிய VFX தொழில்நுட்பத்தை ஷங்கர் கையாண்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இது குறித்து இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளத்தில்,தனது புகைப்படத்துடன்,இந்தியன் 2 படத்தில், லோலா VFX LA என்ற புதிய மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.