ஜெயிலர் படத்தின் 3 வது சிங்கிள், ‘ ஜுஜுபி’ !

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் இவருடன் மோகன் லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்பட பலர் நடித்துள்ளனர்.. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இப்படத்திலிருந்து ஏற்கனவே முதல் சிங்கிள் பாடலான காவலா பாடல் கடந்த ஜூலை 6-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.இரண்டாவது சிங்கிள் பாடலான ‘ஹூ.க் ஹூம் Hukum’ பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிள்பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது