விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் சாக்ஷி சிங் தோனி மற்றும் விகாஸ் ஹசிஜா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட் வழங்குகிறது. தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நெக்ஸஸ் மால் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது சாக்ஷி சிங் தோனி, ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, ஆர். ஜே. விஜய், இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, விநியோகஸ்தர் சக்தி வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.
அவர் ஒரு ஆக்சன் மேன் என்பதால், ஒரு ஆக்சன் ஹீரோவாக நடிப்பதை தான் நான் விரும்புவேன் இது குறித்து அவர் யோசனை செய்தால் அப்படத்தை நானே தயாரிப்பேன் . கடந்த 2006லிருந்து தோனி பல விளம்பர படங்களில் நடித்து வருவதால் தோனிக்கு கேமரா முன்பு எப்படி நடிக்க வேண்டும் என நல்லாவே தெரியும்.
தோனிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையேயான உறவுக்கு மொழி ஒரு தடையில்லை. இது ஒரு உணர்வு பூர்வமானது. தயாரிப்பு நிறுவனம் தொடங்கி முதலில் தமிழ் திரைப்படம் தயாரிக்கிறீர்களே என கேட்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களுக்கும் தோனிக்கும் இடையே மொழி ஒரு தடையாக இருந்ததில்லை. மேலும் எங்கள் நிறுவனத்தை எங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் நினைக்கிறோம்.எங்களுக்கு வளர்ச்சிக்கு முதல் வித்திட்ட சென்னையை நாங்கள் மறக்கமாட்டோம்.
இப்படத்தின் கதையை இயக்குநர் ரமேஷ் தமிழ் மணியிடம் சொன்னபோது அவர் இதை திரைப்படமாக உருவாக்கலாம் என்றார். இந்தக் கதையின் கான்செப்ட் என்னுடைய தோழிகளின் வாழ்க்கையிலும், நான் கேட்ட விசயங்களிலும் இருந்தும் உருவானது. மேலும் மாமியார் – மருமகள் பிரச்சனை என்பது உலக அளவிலானது.
இந்தப் படத்தில் அந்த உறவுகள் குறித்த நேர் நிலையான அதிர்வுகளை பற்றி பேசி இருக்கிறோம். உண்மையில் இந்த திரைப்படம் ஒரு பாசிட்டிவான திரைப்படம். இந்தத் திரைப்படம் பொழுது போக்குடன் தயாராகி இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.