இந்த படத்தின் கதைக்களம் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது என்கிறது படக்குழு. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாவும்,
சமீபத்தில் இப்படத்திற்காக ரஜினியின் டெஸ்ட் சூட் எடுக்கப்பட்டு விட்டது என்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தில் ஏற்கனவே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன், பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் இணைந்துள்ளதாக் கூறப்படும் நிலையில்,தற்போது ரஜினிகாந்துக்கு வில்லனாக பகத் ஃபாசில் நடிக்க உள்ளதாகவும், இது குறித்து படக்குழு, பகத்பாசிலிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தெலுங்கு நடிகர் நானியை நடிக்க வைக்க படக்குழு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில்,ரஜினி, அமிதாப்,பகத் பாசில் உள்ளிட்டோர் இணையும் படத்தில் தானும் இருந்தால், தனக்கான ஸ்கோப் எப்படி இருக்குமோ? எனத் தயங்கியே வந்த வாய்ப்பை நானி மறுத்துவிட்டதாகவும் தொடர்ந்து படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
.