அனிருத் இந்தப் படத்தின்மூலம் இசையமைப்பாளராக பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிளும் இந்த மொழிகளில் வெளியானது. ஷாருக்கானின் இன்ட்ரோ சாங்காக இந்தப் பாடல் அமைந்திருந்தது. தமிழில் இந்தப் பாடலை அனிருத்தே பாடியிருந்தார்.
இந்நிலையில் அடுத்ததாக ஷாருக்கான் -நயன்தாராவின் மெலடி பாடல் ஒன்றும் வெளியாகவுள்ளதாம் இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் அடுத்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷாருக்கான், பயங்கரமான கேரக்டர் என தெரிவித்துள்ளார்.