முழுக்க முழுக்க மலேசியாவில் படமான வெற்றி நடிக்கும் ” லாக் டவுன் நைட்ஸ் ” ( Lock Down Nights ) S.S.ஸ்டான்லி இயக்யிருக்கிறார்.
இதை தொடர்ந்து 8 தோட்டாக்கள்,ஜிவி போன்ற படங்களில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ” லாக் டவுன் நைட்ஸ் ” என்ற படத்தை தயாரித்து வருகிறார்.இப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி எஸ்.எஸ். ஸ்டான்லி இயக்கியுள்ளார்
இதில் ஓடிடி தளத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட ” பூச்சாண்டி ” படத்தில் நாயகியாக நடித்த ஹம்ஷினி பெருமாள் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர்களுடன் கங்கை அமரன்,பெண்குயின் படத்தில் வில்லனாக மிரட்டிய மதியழகன், பூச்சாண்டி படத்தில் வில்லனாக நடித்த லோகன், கோமளா நாயுடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி நடித்த ” பண்ணையாரும் பத்தமினியும் ” படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஜெஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.இணைதயாரிப்பை அர்த்தனாஸ் டிரேடிங் சுபாஸ், வி.எஸ். ஏற்றுள்ளார்
இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் மலேசியாவில் நடைபெற்றது.தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக்கை இசையாமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டணி வெளியிட்டுள்ளார்