முன்னதாக வெளியான இப்படத்தின் ப்ரோமோ மற்றும் டைட்டில் டீசரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தின் வரலாறு கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் நிறைவடைந்து விடும் என்கிறது படக்குழு. இப்படத்தை தொடர்ந்து சூர்யா,சுதா கொங்கரா இயக்கத்திலும் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்திலும் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது..
இச் சந்திப்பின் போது,”விக்ரம் படத்தில் சில நிமிடங்களே வந்து போன ரோலக்ஸ் கேரக்டரை தனி படமாக எடுக்கவுள்ளதாகவும், லோகேஷ் கூறியுள்ள கதை தன்னை மிகவும் இம்ப்ரஸ் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள சூர்யா,அடுத்ததாக இரும்புக்கை மாயாவி படத்திலும் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.