ப்ரோ திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சாய் தரம் தேஜ் ஒரு அழகான மியூசிக் வீடியோவில் அசத்தியிருக்கிறார். சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோவில் நடிகை சுவாதி ரெட்டி இணைந்து நடித்துள்ளார். இந்த மியூசிக் வீடியோவை சாய் தரம் தேஜின் உறவினரும் ஆர்ஆர்ஆர் திரைப்பட நட்சத்திர நடிகருமான ராம் சரண் சமூக வலைதளங்களில் வழியே வெளியிட்டுள்ளார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மியூசிக் வீடியோ, நாட்டின் மீது கொண்ட அன்பிற்காக நாட்டை காக்க, தேசத்தின் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் தியாகங்கள் மற்றும் தடைகளை சித்தரிப்பதாக அமைந்துள்ளது.
மியூசிக் வீடியோ வெளியீட்டை அறிவித்த சாய் தரம் தேஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “, விதி அதன் மேஜிக்கை மீண்டும் நிரூபித்துவிட்டது!!! எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திய நாயகன் மற்றும் எங்கள் நட்பின் அடையாளமாக இருப்பவர், இப்போது நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய #TheSoulOfSatya உடைய பாடலை வெளியிடுகிறார். இந்த அற்புதமான மனிதரை எனக்கு அறிமுகப்படுத்தியற்கும் மற்றும் எங்கள் மியூசிக் வீடியோவை வெளியிட்டதற்கும் சரண் @AlwaysRamCharan நன்றி. @NawinVK நவீன் மற்றும் சத்யாவின் ஆத்மா படைப்பின் மொத்த குழுவிற்கும் இது மிகப்பெரும் பெருமை”இவ்வாறு அதில் கூறியுள்ளார்
இந்த மியூசிக் வீடியோவை நவீன் விஜய் கிருஷ்ணா இயக்கியுள்ள நிலையில், ஸ்ருதி ரஞ்சனி பாடி இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் ரவி இப்பாடலை தமிழில் எழுதியுள்ளார்.. தில் ராஜு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பாலகம் என்ற வெற்றிப் படத்தை தயாரித்த ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஹன்சிதா ரெட்டி இந்த படைப்பைத் தயாரித்துள்ளனர்.