சில நாட்கள் கழித்து ஜிவி பிரகாஷூக்கு சுயநினைவு திரும்புகிறது. ஒருதலையாய் காதலித்த செந்தாழினி அவருக்கு மனைவியாக இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் டான்ஸ் மாஸ்டராகவும், பிரபு தேவா இசையமைப்பாளராகவும், விஜயகாந்த் பிரதமராகவும் சென்னை, மெட்றாஸ் ஆகவும் மாறியிருக்கிறது. குழப்பத்தின் உச்சிக்கு செல்லும் அவர், வேறு ஒரு உலகத்திற்குள் இருப்பதை உணர்கிறார். சரி, எப்படியோ ஒரு தலையாய் காதலித்த காதலி, மனைவியாகி விட்டார். இப்படியே வாழ்ந்து விடலாம், என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு வாழ நினைக்கையில், மீண்டும் பழைய உலகத்திற்கு வந்து விடுகிறார். அங்கே தனது நண்பனுக்கும் கௌரி கிஷனுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அதிர்ந்து போகும் ஜிவி பிராகாஷ், என்ன செய்தார்? என்பதே ‘அடியே’ படத்தின் கதை.
ஜீவாவாகவும், அர்ஜூனாகவும் இருவேறு கதாபாத்திரங்களில் மாறுபட்ட நடிப்பினை கொடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார். என்ன நடக்கிறது என்பது புரியாமல் குழம்பும் காட்சிகளிலும், கௌரி கிஷனை சுற்றி வரும் காதல் காட்சிகளிலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகிறார்.
செந்தாழினியாக வரும் கௌரி கிஷன் அழகிலும், நடிப்பிலும் ரசிகர்களை கிறங்கடித்து விடுகிறார். இவரது அழகை ரசிக்க ‘அடியே’ படத்தினை ரசிகர்கள் மீண்டும்… மீண்டும்., பார்த்தாலும் ஆச்சரியமில்லை! குறிப்பாக காதல் காட்சிகளிலும், ஜிவி பிரகாஷை சமாதானப்படுத்தும் காட்சிகளிலும் சூப்பர் பெர்ஃபார்மன்ஸ்! காட்சிகளுக்கு ஏற்றவாறு நடித்து அசத்துகிறார்.
ஜிவி பிரகாஷின் நண்பராக வரும் ஆர்ஜே விஜய், தனது வழக்கமான நடிப்பின் மூலம் கலகலப்பூட்டுகிறார்.
தன்னைத்தானே கலாய்த்துக் கொள்ளும் வெங்கட் பிரபுவும் ரசிகர்களை சந்தோஷப் படுத்துகிறார்.
கிரிக்கெட் வீரர்கள் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனுஸ் ஆகியோரை வைத்து அமைக்கப்பட்டிருக்கும் காமெடி, வேகப்பந்து வீச்சாளராக இயக்குநர் மணிரத்னம் போன்ற காட்சிகளின் சித்தரிப்பு சிரிக்க வைக்கிறது.
படம் ஆரம்பித்து என்ன நடக்கிறது, என்பதை புரிந்து கொள்ள சற்று கடினாமாக இருக்கிறது. கதை, எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இன்னும் கொஞ்சம் தெளிவாக புரியும்படி சொல்லியிருக்கலாம். ஒரே மாதிரியான, திரும்பத் திரும்ப வரும் காட்சிகள் சலிப்பூட்டுகின்றன. அதையும் சரி செய்திருக்கலாம்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது.
‘அடியே’ 2கே கிட்ஸ் களுக்கானது!