விநாயக சதுர்த்தி தினத்தில் வெளியான ‘ஹனுமான்’ பட போஸ்டர்!

 

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஹனு மான். இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் இப்படம் தற்போது படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஹனு மான் கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். .பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் கே. நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் சில உயர்தர VFX காட்சிகள் உள்ளதால், படக்குழு அதில் தீவிர கவனம் எடுத்து உழைத்து வருகிறது.
இதற்கிடையில் ஹனு மான் தயாரிப்பு தரப்பிலிருந்து ரசிகர்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் தேஜா சஜ்ஜா ஒரு மாறுபட்ட பாரம்பரிய அவதாரத்தில் தோன்றுகிறார்,
இப்படம் தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் வேர்ல்ட் படமாக வெளியிடப்படவுள்ளது.
இப்படத்தின் ஒளிப்பதிவை சிவேந்திரா கவனிக்க,கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படம் ஜனவரி 12, 2024 அன்று சங்கராந்திக்கு திரைக்கு வரவுள்ளது.