டார்க் காமெடி ஜானரில்உருவான ‘முஸ்தபா முஸ்தபா’!

தி மாபோகோஸ் நிறுவனம் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில், பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ், சுரேஷ் ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள புதிய படம், ‘முஸ்தபா முஸ்தபா’.

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘சூது கவ்வும்’ போன்ற படங்களின் டார்க் காமெடி ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது.

இதில் சதீஷூக்கு ஜோடியாக மோனிகா சின்னகோட்லாவும், சுரேஷ் ரவிக்கு ஜோடியாக மானசா செளத்ரியும் நடித்துள்ளனர்

இவர்களுடன் கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா மற்றும் விஜே மகேஸ்வரி, விஜே பார்வதி, லிவிங்ஸ்டன், சாம்ஸ், சூப்பர்குட் சுப்ரமணி (’ஜெய்பீம்’ படப்புகழ்), தீப்ஸ் (’பியார் பிரேமா காதல், ’ஸ்டார்’ படப்புகழ்), உமா பத்மநாபன், வினோத் (’இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘விக்ரம்’) ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடந்து முடிந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் பட வெளியீடு குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதன் ஒளிப்பதிவை கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ,கவனிக்க,எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்,இசையமைத்துள்ளார்