நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த வருடம் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.தங்களது மகன்களுக்கு உயிர் உலகு என பெயரிட்டனர்.
இதையடுத்து தங்களது மகன்களான உயிர், உலக் ஆகிய இருவரின் புகைப்படங்களையும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.
பல மாதங்களாக அவர்களின் முகத்தை காண்பிக்காமல் புகைப்படம் வெளியிட்டவர்கள், தற்போது அவர்களின் முகத்தை காண்பிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தங்களது மகன்களான உயிர் மற்றும் உலக் ஆகிய இருவரையும் தங்களது கையில் வைத்தபடி நயன்தாராவுடன் தான் ரொமான்ஸ் செய்யும் ஒரு புகைப்படத்தையம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.