இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னதாக மலேசியாவில் நடக்கும் என தகவல்கள் வெளியான நிலையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட வுள்ளதாகவும் இதற்காக அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிகழ்ச்சியில் ‘சூப்பர் ஸ்டார்’ பஞ்சாயத்துக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதைக்கு பதிலடியாக விஜய் குட்டிக்கதை ஒன்றை சொல்ல உள்ளதாகவும், மேலும் தனது அரசியல் பயணம் குறித்தும் முக்கிய தகவலை வெளியிட உள்ளதாகவும், இதில் அனைத்து விஜய் மக்கள் இயக்கத்தினரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப ப்பட்டு இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என இப்படத்தின் தயாரிப்புதரப்பு ‘திடீர்’ என அறிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “ பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ் கேட்டும் கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி அப்டேட் வெளியிடுவோம். ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தாதது பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ அல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் திமுக செயல்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய் அரசியலில் நுழைவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுவதால், ஆளுங்கட்சியின் ‘அரசியல் அழுத்தம்‘ காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.
இது குறித்து விசாரித்த போது, லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவாக கருதப்பட்டாலும் இது விஜயின் அரசியல் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியாகவும் மாற்றப்படும் சூழல் உள்ளது இதனால் நகரின் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக கருதப்படும் அப்பகுதி அதிக அளவில் திரளும் ரசிகர்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி போல் இங்கும் நேர்ந்து விடக்கூடாது என்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகவும் தெளிவாக உள்ளதால்,உளவுத்துறை கொடுத்த அறிக்கையின் படியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.