ரஜினிகாந்துக்கு கன்னட அமைப்பு ‘திடீர்’ எச்சரிக்கை! ரசிகர்கள் கொந்தளிப்பு!!

காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் இணைந்து பெங்களூர் பந்த் போராட்டத்தை தொடங்கியுள்ளது.. இதில் வாட்டாள் நாகராஜ் தமக்கு வேண்டிய அமைப்புகள் ஆதரவுடன் கர்நாடகா பந்த் போராட்டம் நாளை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறுகையில்,”காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரை கூட எந்த காரணத்தை சொல்லியும் திறந்துவிடக் கூடாது.

கன்னட சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக கர்நாடகா பந்த் போராட்டம் நடத்தப்பட உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இருந்தாலும் கர்நாடகாவில் இருந்த போது காவிரி நீரை குடித்தவர்.

ஆகையால் கர்நாடகாவுக்கு ஆதரவாகத்தான் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும். காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் பேச வேண்டும்.

கர்நாடகாவில் வறட்சி நிலவும் சூழ்நிலையை ரஜினிகாந்த் விளக்க வேண்டும். அப்படி ரஜினிகாந்த் செய்யாவிட்டால் அவரது திரைபப்டங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் இவ்வாறு அவர் கூறினார்.இவ்விவகாரம் தமிழக ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட அமைப்புகள் நடத்தும் போராட்டத்துக்கு கர்நாடக அரசு அநுமதி மறுத்துள்ளதோடு அங்கு போராட்ட காரர்களுக்கு எதிராக 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.