இது இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் நீடிக்க வேண்டும்? ஒரு பிரச்சினை என்றால் அதை பேசி தீர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராட்டம் நடத்துவதாலும், மறியல் நடத்துவதாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.
போராட்டம் நடத்துவதால் ஏதாவது தீர்வு கிடைத்துவிட போகிறதா? ஒன்றுமே இல்லை. இந்த விவகாரத்தில் இரு மாநில அரசாங்கங்கள் தான் பேச வேண்டும்.இரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ்நாடு, கர்நாடகா அரசாங்கங்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஒருவரையொருவர் புரிந்துகொள்வதும், அனுசரித்து செல்வதும்தான் மனிதத் தன்மை. பிரச்சினையை மேலும் மேலும் பெரிதாக்கிக் கொண்டே செல்வது நல்லது கிடையாது. நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் இருந்து தமிழ் நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று சிவராஜ் குமார் பேசினார்.