ஒரு ஒயின் ஷாப்பை குத்தகைக்கு எடுக்கும் செயல்பாட்டில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் மற்றும் அதன் பின்னான பகை ஆகியவற்றைச் சுற்றி கதை பரபரப்புடன் நகர்கிறது.இப்படத்தை SD மணிபால் எழுதி இயக்கியுள்ளார். இவர் ’தொடரி’, ’கும்கி 2’, மற்றும் ‘காடன்’ போன்ற படங்களில் பிரபு சாலமனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் தீரன் இந்தப் படத்தில் சாலமன் (எ) சாலாவாக நடித்துள்ளார். கதைப்படி அவர் தனது 30 வயதின் முற்பகுதியில், 6 பார்களை சொந்தம் கொண்டாடுபவனாக முரட்டுத்தனமானவனாக இருக்கிறான். மேலும் குணா என்ற பெரியவரின் நம்பிக்கைக்குரியவனாக இருக்கிறான். அறிமுக நடிகையான ரேஷ்மா, கதாநாயகியாக புனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 25 வயது சமூக ஆர்வலராகவும், மதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்க்கும் பள்ளி ஆசிரியையாகவும் இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.