இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு நாளை திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ளது.இப்படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று பகல் 12:10 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.
“நான் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் சூட்டிங்கிற்காக திருவனந்தபுரம் செல்கிறேன்.அந்த படத்திற்கு தலைப்பு இன்னும் வைக்கவில்லை.படத்திற்கு என்ன பெயர் என்பது பின்னர் தான் தெரியும்.ஆனால் இந்த படம் நல்ல கருத்துள்ள படமாக இருக்கும்.அந்த 170 வது படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 171 வது படம் பிரமாண்ட பொழுதுபோக்கு படமாக இருக்கும் .
ஜெயிலர் படத்தின் வெற்றி, நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது. என கூறினார். இதை தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள்,கர்நாடகா காவிரி நீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் ரஜினி எந்த பதிலும் கூறாமல் வேக வேகமாக விமான நிலையத்திற்குள் சென்று விட்டார்