இப்படத்தின் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார் சதா முருகன். இப்படத்தின் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ள சந்தோஷ் சேகரன் கூறுகையில்,” வாழ்க்கையை வெறுத்து சாவைத்தேடி பயணிக்கும் கதாநாயகனைப் பற்றி, ஓர் இரவில் நடைபெறும் திரில்லான, திகிலும் பரபரப்பும் நிறைந்த திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாக மக்கள் ரசிக்கும் வண்ணம் இயக்கி இருக்கிறேன்” என்கிறார்.
இதன் முழு படபிடிப்பும்பாண்டிச்சேரி, கடலூர், ஈரோடு, ஏற்காடு போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.விரைவில் திரையில் சாதுவன்….சாதிப்பான் என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் சதா.முருகன்.இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.பி.செல்வகுமார் வர்மா கவனிக்க,ஆதிஷ் உத்ரியன் பின்னணி இசையமைத்துள்ளார்