இப்படத்தின் முதல் கட்ட பணிகள் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதமே அமெரிக்காவில் தொடங்கப்பட்டன. இப்படத்துக்காக இப்படக்குழு,உலகின் முன்னணி விஎப் எக்ஸ் நிறுவனங்களில் ஒன்றான யுஎஸ்சி- ஐசிடி நிறுவனத்துடன் ‘லைட் ஸ்டேஜ்’ என்ற முறையில் மேம்பட்ட’ மோஷன் கேப்சர்’ விஎப் எக்ஸ் பணிகளுக்காக இணைந்துள்ளது. இப்படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 2ம் தேதி சென்னையில் தொடங்கியுள்ளது.
இப்படம் “ஒரு விறுவிறுப்பான அதிரடி ஆக்சன் படமாக இருக்கும்” என அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘லியோ’ படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் இப்படத்தின் தலைப்பு உள்ளிட்ட விபரங்கள் வெளியாகும் என தெரிகிறது.