இந்நிலையில்,நடிகர் அஜித் தொழிலதிபராகவும் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.விதவிதமான அதி நவீன மோட்டார் சைக்கிளில் அடிக்கடி ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நடிகர் அஜித், இந்நிறுவனத்திற்கு வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்றும் பெயர் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது புதிய நிறுவனத்திற்கு வீனஸ் மோட்டர் சைக்கிள் டூர்ஸ் எனப் பெயரிட்டுள்ளதாகவும், “ராஜஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
முதல் சுற்றுப் பயணம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டிற்கு வருகிற 23 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் மோட்டார் சைக்கிள் மூலம் உலகச் சுற்றுலா செல்ல அறியப்படாத இடங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இது இருக்கும் என்றும் கூறியுள்ளார்.