வரும் ஜனவரி 13-ம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் இப்படம், நாயகன் விக்டரி வெங்கடேஷ்-இன் 75-வது படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை ‘ஹிட்வெர்ஸ்’ படத்தை இயக்கிய சைலேஷ் கொலானு இயக்கி இருக்கிறார். அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படத்தின் நாயகியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். இவர் மனோயா என்ற கதாபாத்திரத்தில் நடத்துள்ளார். இவர்களுடன் ருஹானி ஷர்மா டாக்டர் ரேனுவாகவும், ஆன்ட்ரியா ஜெர்மியா ஜாஸ்மின் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை எஸ் மணிகண்டன் மேற்கொண்டுள்ளார்.