விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து தமிழகத்தின் பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் சிறப்புக்காட்சிகளாக அதிகாலை 4 மணி, 7 மணி காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளநிலையில் தமிழகத்திலும் அதிகாலை காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்
.இதையடுத்து தமிழகத்தில் 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என அரசும் அரசாணை வெளியிட்டது.இந்நிலையில்,தற்போது அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி ’லியோ’ திரைப்படம் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முதல் காட்சியாக காலை 9 மணிக்கு தான் தொடங்க வேண்டும் என்றும்,
19, 20, 21, 22, 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் தினமும் 5 காட்சிகள் அனைத்து திரையரங்குகளிலும் திரையிட்டு கொள்ளலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு ஆரம்பமாக வேண்டும் என்றும் இரவு 1:30 மணிக்குள் கடைசி காட்சி முடிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிகாலை 4 மணி, 7 மணிக்கு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.