நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அவரது 171 வது படத்தை இயக்கி முடித்த பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார்த்தி நடிப்பில் ’கைதி 2’ படத்தையம் அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் இரும்புக்கை மாயாவி ஆகிய படங்களை அடுத்தடுத்து இயக்குவார் .என்கிறார்கள்.
இந்நிலையில் இரும்புக்கை மாயாவி படத்தின் கதை கார்த்திக்காக எழுதியதாகவும், கதையை படித்து பார்த்த தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு இந்த கதையை சூர்யாவுக்காக மாற்றி எழுமாறு கூறியதாகவும், அதன் பின்னரே சூர்யாவுக்காக சில காட்சிகளை மாற்றி எழுதியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘மாநகரம்’ படத்தை முடித்தவுடன் இரும்புக்கை மாயாவி படத்திற்காக 7 மாதங்கள் ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டதாகவும், ஆனால் இதில் ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சி இருந்ததால் அப்போது இந்த கதையை படமாக்க தயங்கியதாகவும் கூறியுள்ளார்.