ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘ஜப்பான்’ டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘சிட்டிக்கு நடுவுல ஒருத்தன் ஓட்டையை போட்டு 200 கோடிபொருளை தூக்கிட்டு போயிருக்கானா, அப்புறம் என்ன சட்டம் ஒழுங்கு மண்ணாங்கட்டி’… என ரவிக்குமாரின் வசனத்தோடு தொடங்கும் இந்த பரபரப்பான டீசரில் ஜிகினா சட்டை,தங்க பற்கள், ‘கைதி’ மிஷின் துப்பாக்கி என கலக்கலா அறிமுகமாகும் கார்த்தியின் ஸ்டைல் கெத்து நடை என பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கும் இப்பட டீசர் . ‘எத்தன குண்டு போட்டாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாதுடா’ என்ற வசனத்துடன் பரபரப்பாகவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறது.