ஜெயிலர் படத்தைதொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெய்பீம் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இதில், ரஜினியுடன் இணைந்து 32 ஆண்டுகளுக்கு பிறகுபாலிவுட் பிக் பி என அழைக்கப்படும் அமிதாப் பச்சன் நடிக்கிறார். இவர்களுடன் ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஷயன், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக ரஜினியுடன் ஃபகத் பாசில் வில்லன் கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பகத் பாசில் சமீப காலமாக தொடர்ந்து வில்லனாகவே நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்காது என படக்குழுவினர் கருதுவதால்,இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது மலையாள நடிகர்,இயக்குனர் பிருத்விராஜை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ரஜினியும் ஓ.கே சொல்லிவிட்டார் என்கிறார்கள்.