இப்படத்தை ’தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்தவுடன் ’கைதி 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்கிறார்கள்.
இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மற்றொரு திரைப்படமான ’சர்தார்’ திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததையொட்டி கார்த்தி வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள வீடியோவில் ’சர்தார்’ படத்தின் 2 ஆம் பாகம் விரைவில் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜு முருகன் இயக்கத்தில் ,கார்த்தி நடிப்பில் அவரது 25 வது படமாக உருவாகியுள்ள ’ஜப்பான்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.