இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் நெல்லை பகுதியில் நடைபெற்ற நிலையில், தற்போது மும்பையில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது ரஜினியுடன் அமிதாப்பச்சன் இணைந்துள்ளார்.
இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பில் அமிதாப்புடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, “33 ஆண்டுகளுக்குப் பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் “தலைவர் 170″ படத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது ” என பதிவிட்டுள்ளார்; இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.