சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளை வென்ற கூட்டணி மீண்டும் ‘சூர்யா 43’ படத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வீடியோவில் ‘சூர்யா 43’ டைட்டில் ‘புறநானூறு’ என டிவிஸ்ட் வைத்து டைட்டிலில் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டுள்ள படக்குழு, அதற்கு முந்தையை வரியை மறைத்துள்ளது.இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் புற நானுறுன்னா ‘எட்டுத்தொகை’யா , ஆற்றுப்படையா? ‘ஆண்டு’க்காக காத்திருக்க வைத்து காண்டாக்காதீங்க என பதிவிட்டு வருகின்றனர்.
Dear all we are excited! Joining hands with @Sudha_Kongara again in a @gvprakash musical, his 100th! SO looking forward to work with my brother @dulQuer & the talented #Nazriya & the performance champ @MrVijayVarma Glad @2D_ENTPVTLTD is producing this special film! #Jyotika… pic.twitter.com/wW9iu0jMeR
— Suriya Sivakumar (@Suriya_offl) October 26, 2023