இப்படத்தின் பூஜை இன்று ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் விருந்தினர்,படக்குழுவினர் முன்னிலையில் துவங்கியது. இப்படத்தின் ஸ்கிரிப்டை அல்லு அரவிந்த் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார். படத்தின் முதல் காட்சிக்காக ஆன்மோல் சர்மா கேமராவை இயக்க, VV விநாயக் கிளாப்போர்டு அடித்தார். K ராகவேந்திரா ராவ் முதல் காட்சிக்கு இயக்கம் செய்து கௌரவித்தார்.
இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நடிகரும் திரைப்படத் இயக்குநருமான செல்வராகவன் நடிகராக அறிமுகமாகிறார். மேலும் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகி பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
முன்னணி இசையமைப்பாளர் S தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை
பிகில், மெர்சல்,ஜவான் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் ஜி.கே. GK விஷ்ணு ஏற்றுள்ளார்
வசனங்களைச் சாய் மாதவ் புர்ரா எழுதியுள்ளார், மயூக் ஆதித்யா, ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, M விவேக் ஆனந்த் மற்றும் ஸ்ரீகாந்த் நிம்மகத்தா ஆகியோர் மற்ற எழுத்தாளர்களாக பணியாற்றுகின்றனர்.