லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உல் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.இந்நிகழ்வில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா சபாஸ்டின், மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ் ‘பிக் பாஸ்’ ஜனனி, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் நடிகர் விஜய் பேசுகையில் சொன்ன குட்டிக்கதை இது தான்.
“ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க… அந்த காட்டுல காக்க கழுகு… முயல், மான்… காட்டுல இதெல்லாம் இருக்கும் தான அதுக்கு சொன்னேன் பா!. அது மாதிரி இந்தக் காட்டுக்கு வேட்டைக்கு போறாங்க. ஒருத்தர் வில் அம்பு. இன்னோரு நபர் ஈட்டி. வேல் வச்சுருக்கிறவர் முயலுக்கு குறி வைக்கிறார். முயலை அடிச்சு தூக்கிட்டாரு.இன்னொருத்தர் யானையைக் குறி வைக்கிறார்.ஆனா,மிஸ் பண்ணிடறாரு ,ரெண்டு பேரும் ஊருக்கு திரும்பி வராங்க.
இதுல யாருக்கு வெற்றி யானைக்கு குறி வச்சவர் தான் மாஸ். கைக்குக் கிடைக்கிறது இல்லமா பெருசா குறி வச்சிருக்கார்ல. அது மாதிரித்தான் உயரிய விஷயங்களுக்கு ஆசைப்படணும். ஆசைகள் கனவுகள் இதுல என்ன தவறுகள். வீட்டுல குட்டி பையன் அப்பாவோட உடையை போட்டுக்குவான். அப்பா சட்டை பெருசு. அப்பா மாதிரி ஆகணும்னு கனவு காண்கிறான்.
பாட்டு ரிலீஸ் ஆகி ரெண்டு லைன் கட் ஆச்சு… விரல் இடக்குல ஒரு வரி.. அதை ஏன் சிகெரட்ன்னு நினைக்கிறீங்க… அதுல தீர்ப்பை மாத்தி எழுதுற பேனாவாக கூட இருக்கலாம்… அண்டால குடுக்கிறது கூழ்ழாக கூட இருக்கலாம். இது மாதிரி மழுப்பல் பதில் நான் சொல்லலாம்.ஆனா சினிமாவை சினிமாவா பாருங்க. ஒரு நெகடிவ் கதாபாத்திரத்திற்குத் தேவையான விஷயங்களத்தான் வச்சாங்க. அதெல்லாம் நீங்க எடுத்துக்க மாட்டீங்கனு தெரியும்.ஸ்கூல், காலேஜ் பக்கத்துல தான் ஒயின் ஷாப் இருக்கு.. அவுங்க என்ன அடிச்சுட்டு போறாங்களா… அவுங்கலாம் ரொம்ப தெளிவு… என் படம் நல்லா இல்லைனாலும் நல்ல இல்லைன்னு போயிடறாங்க… உங்கள்ல பலர் சொல்லமையே பல விஷயங்கள் செய்றீங்க…
ஏவிஎம் ‘ சரவணன் வடபழனி பக்கம் போகுறப்போ ஒருத்தவங்களுக்கு உதவி பண்ணயிருக்காங்க… அப்போ அவுங்க நன்றி ‘எம்ஜிஆர்’ ன்னு சொன்னாங்களாம்…. யார் உதவி பண்ணாலும் அது ‘எம்ஜிஆர்’ பண்ணதுன்னு நினைச்சுடறாங்க. எனக்கு ஒரு ஆசை வருங்காலத்துல இது மாதிரி உதவி பண்றது நம்ம பசங்க தான்னு சொல்லணும்.
புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான் நடிகர் திலகம்னா ஒருத்தர் தான்புரட்சி கலைஞரனா ஒருத்தர் தான்.அதே மாதிரி உலக நாயகன்னா ஒருத்தர் தான் சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர் தான்.தலன்னா ஒருத்தர் தான்.நீங்கள் மன்னர்கள்.நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்றேன் இவ்வாறு அவர் பேசினார்.