நடிகர் ஜுனியர் பாலையா திடீர் மரணம்.!

பழம்பெரும் நடிகரான டி.எஸ்.பாலையாவின் மகன் ஜுனியர் பாலையா உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்.ஜுனியர் பாலையாவின் இயற்பெயர் ரகு. சினிமாவிற்காகதனது பெயரை ஜுனியர் பாலையா என்று மாற்றிக் கொண்ட இவர், 1975ம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற படத்தில் அறிமுகமான நிலையில், பின்பு பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.அவரது இறுதி சடங்கு நாளை மாலை நடக்கிறது ஜூனியர் பாலையா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ஜூனியர் பாலையா கடந்த 1953 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார், இவர்
ஒரு இந்திய மேடை மற்றும் திரைப்பட நடிகர் ஆவார், இவர் மேல்நாட்டு மருமகள் ,
இளைய தலைமுறை,தியாகம்,எமனுக்கு எமன்,வாழ்வே மாயம்,தூரம் அதிகமில்லை, அன்பே ஓடிவா கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட படங்களில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் மறைந்த பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகனாவார்
,

இவர் ஹீலிங் ஸ்ட்ரைப்ஸ் மினிஸ்ட்ரி என்ற குணப்படுத்தும் மையத்தை தொடங்கி நடத்தி வந்தார்.இயக்குனர் சமுத்திரகனியுடன் சாட்டை என்ற படத்தில் தலைமை ஆசிரியராக நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார், அதே நேரத்தில் அவர் கடந்த 2015 இல் தனி ஒருவன் மற்றும் புலி உள்ளிட்ட படங்களில் தோன்றினார்.

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’யில், அஜித்துடன் இருக்கும் பெரியவராக நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் ஜூனியர் பாலையா (வயது 70) சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாஞ்சி நாதன் தெருவில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன்வசித்து வந்தார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும்,ரோகித் என்ற மகனும்,நிவேதிதா என்ற மகளும் உள்ளனர்.மகன் ரோகித் சில திரைப்படங்களில் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஜூனியர் பாலையா கடந்த சில வருடங்களாக மூச்சு திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை ‘மூச்சு திணறல்’ அதிகமாகி ‘திடீர்’ மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்கு சென்னையில் நாளை மாலை நடக்கிறது.