துவாரகா புரடக்சன்ஸ் படநிறுவனம் சார்பில் பிளேஸ் கண்ணன் – ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் கலக்கலான காமெடிப்படமாக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு , பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இப்படத்தின் மூலம்’டார்லிங்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘ஹீரோ’, மற்றும் ‘மார்க் ஆண்டனி’ படங்களில், திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய ரா.சவரிமுத்து இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் ரா.சவரிமுத்து கூறுகையில்,”ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசித்துச் சிரிக்கும் ஒரு அருமையான படைப்பாக இருக்கும். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,
யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள் என்கிறார்.