‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள புதிய வெப் தொடர் ‘லேபிள்’. இந்தத் தொடரில் ஜெய், தான்யா ஹோப், மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இத்தொடருக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது தொடர் குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறுகையில்,’
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசியதாவது, “லேபில் என் மூன்றாவது படைப்பு.இப்படத்தின் கதைக்களம் வட சென்னை என்பதால் டயலாக் எல்லாம் கொஞ்சம் ராவாகவே இருக்கும். ஒவ்வொன்றிலும் கற்றுக்கொண்டு வருகிறேன். இதில் என்னை ஈஸியாக வைத்துக்கொண்டவர் ஒளிப்பதிவாளர் தினேஷ். அவர் தான் எனக்காகச் சேர்த்து உழைத்தார். எனக்குக் கிடைத்த கிஃப்ட் அவர். அவருக்கு நன்றி. இந்த சீரிஸில் வேலை பார்த்த அனைவரும் என்னை மிகவும் நம்பினார்கள், எல்லோரும் சினிமாவில் சாதித்தவர்கள், அவர்கள் தரும் உழைப்பைச் சரியாக எடுத்துக்கொண்டாலே போதும். இந்த சீரிஸ் நன்றாக உருவாக காரணம், என் டைரக்சன் டீம் தான்.
என்னையே அவர்கள் தான் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. ஜெய் இந்த படைப்பின் மூலம் நண்பராகக் கிடைத்துள்ளார். இதற்கு முன் வேட்டை மன்னனில் அஸிஸ்டெண்டாக இருந்த போது அவர் நடிகராக இருந்தார், இப்போது அவரை இயக்கும்போது எனக்காகக் கூடுதலாக உழைத்தார் நன்றி. எங்கள் டீமில் நிறைய இழப்பு நேர்ந்திருக்கிறது அதைத்தாண்டி, உங்களுக்காக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளோம். உங்கள் கைதட்டல்களில் தான் எங்கள் மகிழ்ச்சி இருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன் இவ்வாறு அவர் பேசினார் இத்தொடரை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர்.