அனிருத் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
இந்நிலையில்,விடாமுயற்சி’ படக்குழுவினர் சென்னை வந்து தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடி விட்டு, பின்னர் மீண்டும் அஜர்பைஜான் சென்று படப்பிடிப்பை தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அஜித்தோ, தொடர்ச்சியாக நடந்து வரும் படப்பிடிப்பில் தொய்வு விழுந்து விடும் என்றும், ஏற்கனவே இதன் படப்பிடிப்பு தொடங்குவதற்கே நீண்ட காலம் எடுத்துக் கொண்டதையும் சுட்டிக்காட்டி, தற்போது அஜர்பைஜானில் நடந்து வந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதையடுத்து, அடுத்தகட்ட படப்பிடிப்பை துபாயில் தொடர்வது என்றும்,அனைவரும் தீபாவளியை துபாயிலேயே கொண்டாடுவோம் என கறாராக கூறி விட்டராம்.,
இதையடுத்து தீபாவளிக்கு பட குழுவினர் சென்னை திரும்பாமல் தொடர்ச்சியாக தற்போது துபாயிலேயே படப்பிடிப்பை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பின் போதும் இதேபோல் தீபாவளியை படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்திலேயே கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.